Activities
10th Result 2013 – 2014
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஸ்ரீ ராமஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவ - மாணவியர் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் S. பாஸ்கருக்கு சேர்மன் C. ஏழுமலை M.A., அவர்கள் பரிசு வழங்கினார். இயக்குனர்கள் E. செந்தில்குமார், E. ஸ்ரீதர், தலைமை ஆசிரியர் V. அகிலா மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஸ்ரீ ராமஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10 – ஆம் வகுப்பு படித்த 63 மாணவர்களில் S. பாஸ்கர் 496/500 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். S. அர்ச்சனா 487/500 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளார். M. பவித்ரா 484/500 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார். 450 லிருந்து 477 வரை எட்டு பேர் பெற்றுள்ளனார். மற்றும் மீதமுள்ள மாணவர்கள் 400 லிருந்து 450 மதிப்பெண் பெற்றுள்ளனார். அறிவியல் பாடத்தில் 100/100 – 8 மாணவர்கள் சமூக அறிவியல் பாடத்தில் 100/100 – 1 மாணவர். மேற்படி முதலிடத்தில் வெற்றி பெற்ற மாணவர் கூறுகையில் இந்தப் பள்ளியில் எனக்கு சேர்மன் அவர்கள் எப்படியும் நீதான் முதலிடத்தில் வருவாய் என்று கூறி என்னை பார்க்கும் போதெல்லாம் உற்சாகப்படுத்துவார். அதேபோல் என்னுடைய தலைமை ஆசிரியர் அவர்கள் எப்பொழுதும் என்னை அரவணைப்போடு முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று அறிவுரைக் கூறுவார். மேலும் ஆசிரியப் பெருமக்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர். எனது தாய் தந்தையரும் நான் நன்றாக படிக்க வேண்டும் என்று தினமும் இரவில் விழித்திருந்து என்னை படிக்க வைத்தனர். அனைவருக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாடம் | மதிப்பெண் |
---|---|
தமிழ் | 98/100 |
ஆங்கிலம் | 99/100 |
கணிதம் | 99/100 |
அறிவியல் | 100/100 |
சமூக அறிவியல் | 100/100 |
மொத்தம் | 496/500 |
10 – ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 4 – ஆம் இடமும் மாவட்ட அளவில் 3 – ஆம் இடமும் பெற்று சாதனை படைத்த போளூர் ஸ்ரீ ராமஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் ளு.பாஸ்கர் அவர்களை பாராட்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. A. ஞானசேகரன் அவர்கள் பரிசு வழங்கினார். உடன் பள்ளியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளியின் நிர்வாக இயக்குனர் திரு. E. செந்தில்குமார் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள்.